News Just In

2/03/2023 02:49:00 PM

மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தில் ஒன்றுகூடுமாறு அழைப்பு விடுக்கும் சாணக்கியன்ம் M P !




எதிர்வரும் நான்காம் திகதி மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தில் ஒன்றுகூடுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.டுவிட்டர் பதிவொன்றில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அந்த பதிவில் மேலும், எப்போதும் பெப்ரவரி 4ஆம் திகதி தமிழருக்கு இருள் தினமாகும். எமது உரிமைகளை நாம் பெற்றெடுக்க வேண்டும். எமது இனமும் சம உரிமையுடன் வாழ வேண்டும்.

அனைவரும் வருகின்ற பெப்ரவரி நான்காம் திகதி மட்டக்களப்பு கல்லடிப்பாலத்தில் காலை 9 மணிக்கு எமது இனத்தின் சுதந்திரத்துக்காக ஒன்றுகூடுவோம்.

உங்கள் ஆதரவை வழங்குங்கள் என இலங்கை தமிழரசுக் கட்சி அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: