News Just In

2/16/2023 04:00:00 PM

கரையொதுங்கிய திமிங்கிலங்கள்!



இந்து சமுத்திரத்தில் சமீபத்தில் இடம்பெற்ற நில அதிர்வுகள் காரணமாக திமிங்கிலங்கள் இலங்கை கடற்கரைகளை நோக்கி நகரலாம் என கடல்சார் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பெப்ரவரி 11 ம் திகதி கல்பிட்டி கடற்கரையை நோக்கி திமிங்கிலங்கள் சென்றமைக்கு இந்து சமுத்திர பகுதியில் சமீபத்தில் இடம்பெற்ற நில அதிர்வுகளே காரணமாக இருக்கலாம் என கடல்சார் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

திமிங்கிலங்கள் கற்பிட்டி கண்டங்குளி கடற்கரைக்கு வந்ததை தொடர்ந்து 15 மணித்தியால கடும் முயற்சியின் பின்னர் அதிகாரிகள் அவற்றை மீண்டும் கடலிற்குள் அனுப்பினார்கள்.

மீனவர் ஒருவரிடமிருந்து தகவல் கிடைத்ததை தொடர்ந்து நான்கு மணியளவில் திமிங்கிலங்களை கடலுக்குள் திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்தோம் என மீட்பு நடவடிக்கைகளை பொறுப்பான உபாலி குமாரதுங்க தெரிவித்தார்.

நாங்கள் அவற்றை கடலிற்குள் அனுப்ப முயன்ற போதெல்லாம் அவை மீண்டும் கரைக்கு வந்தன இதனால் அவற்றை கடலிற்குள் அனுப்பும் நடவடிக்கை சவாலானதாக காணப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தை சேர்ந்தவர்கள் கடற்படைய சேர்ந்தவர்கள் உட்பட 25 பேர் இந்த நடவடிக்கைகளில் பங்கெடுத்தனர் என அவர் தெரிவித்தார்.

நான்கு மணிக்கு ஆரம்பமான இந்த நடவடிக்கை 7.30 மணிக்கு முடிவிற்கு வந்தது.

11 திமிங்கிலங்களை அவர்களால் கடலிற்குள் அனுப்ப முடிந்தது, 3 திமிங்கிலங்கள் உயிரிழந்துள்ளன.

உயிரிழந்த திமிங்கிலங்களை பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர் அது குறித்து நீதிமன்றத்திற்கு அறிவித்த பின்னர் அவற்றின் பாகங்களை புதைப்போம் என அவர் தெரிவித்தார்.

எனினும் ஒரு திமிங்கிலத்தின் உடற்பாகங்களையாவது நாங்கள் பாதுகாப்பது குறித்து சிந்தித்து வருகின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்.

திமிங்கிலங்கள் கரையொதுங்கியமைக்கு இரண்டு காரணங்களை முன்வைக்கின்றார் கடல் உயிரியலாளர் ரணில் நாணயக்கார

திமிங்கிலங்கள் எப்போதும் கூட்டமாக பயணிக்கின்றன தங்கள் தலைவனை பின்தொடர்கின்றன- தலைவர் எப்போதும் கடற்கரையை சென்றடைவார் ஆனால் தலைவனின் உடல்நிலைக்கு பாதிப்பு ஏற்பட்டால் ஏனைய திமிங்கிலங்கள் கரையை சென்றடையும் என அவர் தெரிவிக்கின்றார்.

கல்பிட்டி கடற்கரையில் உயிரிழந்த திமிங்கிலங்களில் ஒன்று அந்த திமிங்கிலங்களின் தலைவனாக இருந்திருக்கவேண்டும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இந்து சமுத்திரத்தில் இடம்பெற்ற நிலநடுக்கங்கள் இந்த திமிங்கிலங்கள் இலங்கை கடற்கரைக்கு வருவதற்கான மற்றுமொரு காரணமாகயிருக்கலாம் என நாணயக்கார திமிங்கிலங்கள் சோனரை பயன்படுத்தி பயணிக்கின்றன இதனால் அவை இலகுவில் திசைதிரும்புகின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திமிங்கிலங்களில் இரண்டு வகைகள் காணப்படுகின்றன- இலங்கையில் கரையொதுங்கியது வகை என தெரிவிக்கும் நாணயக்கார இந்த வகை திமிங்கிலங்கள் எப்போதும் வெப்பமண்ட நீர் பகுதியில் காணப்படுகின்றன எனவும் குறிப்பிடுகின்றார்.

இவ்வாறானசம்பவங்கள்இலங்கையில்முன்னரும்இடம்பெற்றுள்ளன,மிகச்சமீபத்தில் 2020 இல் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றது - பாணந்துறையில் 120 பயலட் திமிங்கிலங்கள் கரையொதுங்கின.

2017 இல் கிழக்கு கரையோரத்தில் காணப்பட்ட 20 திமிங்கிலங்களை கடற்படையினர் காப்பாற்றினர்.

No comments: