கொழும்பில் கோடீஸ்வர தொழிலதிபர் ஒருவரால் நடத்தப்பட்ட ஆடம்பரமான விபச்சார விடுதி சுற்றிவளைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டுள்ளது.
அங்கு, இந்தோனேசிய பெண் உட்பட இரண்டு பெண்கள் மற்றும் அதன் மேலாளர்கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து பெண்களை சுற்றுலா விசாவில் இலங்கைக்கு அழைத்து வந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்துவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த வீட்டில், இந்த மோசடியை நடத்தி வரும் கோடீஸ்வர வியாபாரிக்கு பணம் வழங்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்ட கருத்தடை மாத்திரைகள், பத்தாயிரம் ரூபாய் பணம் மற்றும் வங்கி ரசீதுகள் ஆகியவையும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கொள்ளுப்பிட்டி மல் வீதியிலுள்ள ஆடம்பரமான இரண்டு மாடி வீடொன்றில் வெளிநாட்டுப் பெண்களை பணத்திற்காக விற்பனை செய்யும் இரகசிய வியாபாரம் ஒன்று இடம்பெறுவதாக வலான ஊழல் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கோட்டை நீதவான் நீதிமன்றில் பெறப்பட்ட தேடுதல் உத்தரவுக்கு அமைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை முகவராக நியமித்து அங்கு தங்கியிருந்த இந்தோனேசியப் பெண்ணொருவரை பத்தாயிரம் ரூபாவிற்கு அழைத்துச் சென்ற பொலிஸ் குழு சில நொடிகளில் சுற்றிவளைப்பை நடத்தியது. கைது செய்யப்பட்ட பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஆயுர்வேத மசாஜ் சென்டரில் வேலை வாங்கித் தருவதாகவும், விமான நிலையத்திலிருந்து அழைத்துச் சென்று பலவந்தமாக பணத்துக்கு விற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட வெயங்கொடை வசிப்பிட முகாமையாளர் இந்த மோசடியை நடத்தி வரும் கோடீஸ்வர வர்த்தகரின் வங்கிக் கணக்கில் தினமும் 55000 ரூபாவை வரவு வைத்துள்ளார் என்பது அங்கு கிடைத்த வங்கி ரசீதுகளின் மூலம் தெரியவருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தக் கட்டிடம் மாதாந்த வாடகை அடிப்படையில் மூன்று இலட்சம் ரூபாவிற்கு கோடீஸ்வர வர்த்தகரால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இந்த விபச்சார நிலையத்திற்கு அரசியல்வாதிகள் மட்டுமின்றி உயர்மட்ட பிரமுகர்களின் ஆதரவுகளையும் பெற்றுக் கொள்வதற்காக தொடர்ந்து வருவது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கோடீஸ்வர தொழிலதிபர் இதற்கு முன்னர் கல்கிஸ்ஸயில் ஆடம்பர வீடு ஒன்றை வாங்கி வெளிநாட்டு பெண்களின் அனுமதியின்றி விபச்சார தொழில் நடத்தியதற்காக ஏழு வெளிநாட்டு பெண்களுடன் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக கொள்ளுப்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
No comments: