இலங்கையில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் வார இறுதி நாட்களான எதிர்வரும் 4 மற்றும் 5ஆம் திகதிகளில் மூடப்படவுள்ளது.
இற்த அறிவித்தலை இலங்கை மதுவரித் திணைக்களம் விடுத்துள்ளது.
நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு எதிர்வரும் சனிக்கிழமை (4) மதுபானசாலைகள் மூடப்படுவதுடன், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (5) போயா தினம் என்பதால் அன்றைய தினம் மதுபானசாலைகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: