யாழ்.கோண்டாவில் பகுதியை சேர்ந்த 18 வயதான இளைஞனையும், சுன்னாகம் பகுதியை சேர்ந்த 35 வயதான குடும்ப பெண் ஒருவரையும் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் மற்றும் சுன்னாகம் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்றுமுன்தினம் 14ம் திகதி காதலர் தினத்தன்று இவர்கள் காணாமல்போயுள்ளதாக மேற்படி பொலிஸ் நிலையங்களிலும் உறவினர்களால் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவ்விரு முறைப்பாடுகளுக்குமிடையில் தொடர்பிருக்குமா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இதேவேளை மாயமான குடும்ப பெண் இரு ந்பிள்ளைகளின் தாயார் என கூறப்படுகின்றது.
No comments: