News Just In

2/03/2023 12:33:00 PM

கல்முனை பிராந்திய வேலைத் திட்டங்களை துரிதப்படுத்த ஒப்பந்தக்காரர்களுடன் நடைபெற்ற சந்திப்பு !




மாளிகைக்காடு நிருபர்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் முன்னெடுக்கப்படுகின்ற PSSP செயற்றிட்டம் மற்றும் ஏனைய நடவடிக்கைகள் தொடர்பில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஒப்பந்தக்காரர்களை தமது அலுவலகத்தில் சந்தித்ததுடன் வேலைத் திட்டங்களை துரிதப்படுத்த கோரிக்கை விடுத்ததுடன் வேலை திட்டங்கள் யாவும் நேர்த்தியாகவும் மக்கள் பயன்படுத்தக்கூடிய விதத்திலும் அமையப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும் கட்டுமானங்களை பார்வையிடுவதற்காக பணிமனையினால் பல்வேறு குழுக்கள் அமைத்துள்ளதாகவும் குறித்த குழுவினர் கட்டிடங்களின் தரத்தினையும் ஏனைய உபகரணங்கள் மற்றும் பொருட்களின் தரத்தினையும் பரிசீலிப்பார்கள் என்றும் அவர்களிடம் தெரிவித்தார்

குறித்த கூட்டத்தில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் வைத்தியர் எம்.பி.ஏ. வாஜித் திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி எம்.சீ.எம் மாஹிர் பொறியியலாளர் திரு அச்சுதன் கணக்காளர் திருமதி உசைனா பாரிஸ் உயிரியல் மருத்துவப்பொறியியலாளர் தொழில்நுட்ப உத்தியோகத்தர் மற்றும் விடய உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்


No comments: