News Just In

2/16/2023 12:30:00 PM

கொழும்பில் உள்ள இந்திய விசா விண்ணப்ப நிலையம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது




பாதுகாப்பு காரணத்திற்காக கொழும்பில் உள்ள விசா விண்ணப்ப நிலையம், மறு அறிவித்தல் வரை மூடப்படும் என கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

உயர்ஸ்தானிகராலயத்தினால் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, நேற்று இரவு ஏற்பட்ட பாதுகாப்புக் காரணத்தினால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஆகவே முன்பதிவு செய்தவர்கள் ஐவிஎஸ் பிரைவேட் லிமிடெட் உடனான தங்கள் சந்திப்புகளை மறுபரிசீலனை செய்யுமாறு இந்திய உயர் ஸ்தானிகராலயம் கேட்டுக் கொண்டுள்ளது.

இருப்பினும் அவசர சேவையை பெற்றுக்கொள்ள வேண்டும் எனில் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலய அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

தூதரகம் மற்றும் விசா தேவைகள் குறித்தது மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள 011 232 6921 011-2421605,011-242 2788,011-2327587 என்ற தொலைபேசி இலக்கங்களை பயன்படுத்த முடியும்

No comments: