News Just In

2/16/2023 07:49:00 AM

பசில் ராஜபக்சவின் அமெரிக்க சொத்துக்கள் குறித்த பட்டியல் விரைவில் வெளியிடப்படும் : விமல் வீரவன்ச!

பசில் ராஜபக்சவின் அமெரிக்க சொத்துக்கள் குறித்த பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

பசில் ராஜபக்சவின் இந்த அணுகுமுறை, தனது சொத்துக்களை வைத்திருக்கும் அமெரிக்காவை கோபப்படுத்தும் வகையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும், "பொருளாதார நெருக்கடியால், இந்த நாடு ஒரு விசித்திரமான மனநிலையில் விழுந்துள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு இந்த நாட்டின் தலைவர்கள் எங்கும் ஓடவில்லை. இந்த அரசாங்கத்தின் அமைச்சரவையில் அமர்ந்து கொண்டு நாடு எந்த நிலைக்கு வீழ்ச்சியடையும் என்பதை அறிவோம் என்றோம்.

அப்படிச் சொல்லும் போது கோட்டாபய ராஜபக்ச சிலை போல் நிற்கின்றார். சற்று கடினமான கேள்வியை எழுப்பினால் பசிலின் முகம் நன்றாக தெரியும். டொலர் பிரச்சினை எழுப்பப்பட்ட போது, ​​கோட்டாபய பசிலைப் பார்த்தது எனக்கு நினைவிருக்கின்றது.

'இல்லை, இல்லை, அப்படி ஒன்றும் பிரச்சினை இல்லை. ஒரு சில பணக்காரர்களால் வந்த பிரச்சினையை ஒரு வாரத்தில் தீர்த்து வைப்பேன்” என்று கொஞ்சம் நகைச்சுவையுடன் பசில் பேசியிருந்தார்.

எண்ணெய் பிரச்சினைக்கு 4 மாதங்களுக்கு முன்னர் அமைச்சரவையில் உதய கம்மன்பில, 'எண்ணெய் சுத்திகரிப்பு வேலைத்திட்டத்திற்கு விரைவில் செல்ல வேண்டும்' என்றார்.

ஆனால் பசில் ராஜபக்ச தொலைக்காட்சி உரையாடலில், 'ஆம்! அவர் அப்படித்தான் சொன்னார். ஆனால், மக்களுக்கு சிரமமாக இருக்கும் என்பதால் அதை செய்யவில்லை' என்றார்.

இறுதியாக, இந்நாட்டின் தாய் தந்தையர் எண்ணெய் வரிசைகளில் தவித்து இறந்தபோது, ​​அவர்கள் நலமாக உணர்ந்தனர்.

இவை அனைத்தும் சேர்ந்து இறுதியில் நாட்டை வீழ்ச்சிக்கு இட்டுச்சென்றன. மேலும், 69 இலட்சம் வாக்குகள் வீழ்ச்சிக்கு வித்திட்டதாகவும் வீரவன்ச தெரிவித்துள்ளார்.



No comments: