மாளிகைக்காடு நிருபர்
நடைபெற்று முடிந்த தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவன் ஏ.ஜீ.எம். அஹ்னப் கல்முனை வலய கல்வி சாய்ந்தமருது கல்விக் கோட்டத்தில் அதிகூடிய (178 புள்ளிகள்) பெற்று கோட்டத்தில் முதலாமிடம் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். இவர் நிந்தவூர் அல்- அஷ்ரக் தேசிய பாடசாலை அதிபர் ஏ.ஏ. கபூர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ. ஹஸீனா சர்பின் ஆகியோரின் புதல்வராவார்.
கல்முனைக் கல்வி வலய மட்டத்தில் இந்த மாணவன் இரண்டாமிடம் பெற்றுள்ளதுடன், இப்பாடசாலையில் இம்முறை பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் வரலாற்றில் முதல்தடவையாக 5 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளது பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.
இந்த புலமை பரிசில் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்கள், இவர்களின் கல்விப்பணிக்கு உறுதுணையாக இருந்த சகலருக்கும் பாடசாலை சமூகம் சார்பாக பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்வதாக பாடசாலை அதிபர் எம்.ஐ.சம்சுதீன் தெரிவித்தார்.
No comments: