இலங்கை சனநாயக சோஷலிச குடியரசின் 75வது தேசிய சுதந்திரதின திருகோணமலை மாவட்ட பிரதான நிகழ்வு இன்று (04) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
அரசாங்க அதிபர் வி.எச்.என்.ஜெயவிக்ரம தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில அத்துகோரள மற்றும் மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயக்கா ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது, மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயக்காவினால் தேசியக்கொடியெற்றிவைக்கப்பட்டதன் பின்னர் எமது நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த படைவீரர்கள் மற்றும் ஏனையவர்காளுக்காக 2 நிமிட மெளன பிராத்தனையும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண திணைக்களத் தலைவர்கள், பொலிஸ் உயரதிகாரிகள் மற்றும் இராணுவத்தினர், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், உழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
No comments: