News Just In

1/06/2023 08:44:00 AM

பெரும் ஆபத்தில் இலங்கையில் - பாதுகாத்துக் கொள்ளுமாறு மக்களுக்கு எச்சரிக்கை!




இலங்கையில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவினால் அது பேரழிவை ஏற்படுத்தும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

தற்போது மனித வளம், மருந்துகள், தடுப்பூசிகள், எரிபொருள், சத்திரசிகிச்சைப் பொருட்கள் போன்றவற்றுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுவதால், கொரோனா தொற்றுநோய் பரவினால் அதனைக் கட்டுப்படுத்த முடியாதது என சங்கத்தின் தலைவர் உபுல ரோஹண தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டில் இருந்து வரும் எவரையும் பரிசோதிக்கும் சாத்தியம் இல்லாததால், கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு கூடிய விரைவில் நாட்டிற்கு வரும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், முகக் கவசத்தை சரியாக அணிவது, தூர இடைவெளியை பராமரித்தல், நெரிசலான இடங்களில் மக்கள் தங்காமல் இருப்பது மற்றும் கைகளை எப்போதும் சுத்தமாக வைத்திருப்பது போன்ற விடயங்களை மக்கள் எப்போதும் கவனித்துக் கொள்ள வேண்டும் என சங்கத்தின் தலைவர் உபுல ரோஹண வலியுறுத்தியுள்ளார்.



No comments: