- ஏ.எச்.ஏ. ஹுஸைன்
ஒழுக்கத்தை ஊடுகடத்துவதில் இஸ்லாமிய வாலிபர் இயக்கம் சிறந்த பணியாற்றி வருவதாக சட்டத்தரணியும் இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றத்தின் நிகழ்ச்சித் திட்டப் பணிப்பாளருமான அஸாத் முஸ்தபா தெரிவித்தார்.
இலங்கை இஸ்லாமிய வாலிபர் இயக்கத்தின் திருகோணமலை கிளையினால் ஒழுங்கு செய்யப்பட்ட சிறந்த சமூக சேவைகளுக்கான விருதளிப்பு, கல்வி அடைவ மட்டங்களில் திறமை காட்டிய மாணவர்களுக்கான பாராட்டு, அமைப்பின் செயற்பாட்டு அறிக்கை சமர்ப்பிப்பு மற்றும் ஒன்றிப்பு ஆகிய நிகழ்வுகள் திருகோணமலை ஜமாலியா நகரில் உள்ள தனியார் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை 15.01.2023 இடம்பெற்றது.
அமைப்பின் திருகோணமலை மாவட்டப் பணிப்பாளர் முஸ்தபா முக்தார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இலங்கை இஸ்லாமிய வாலிபர் இயக்கத்தின் தேசியத் தலைவர் இஹ்ஸான் அப்துல் ஹமீட், திருகோணமலை மாவட்ட வர்த்தக கைத்தொழில் சம்மேளனத் தலைவர் கே. குலதீபன் வை.எம்.எம்.ஏ. முன்னாள் தலைவர் முன்னாள் தலைவர் ஷஹீத் முஹம்மத் றிஸ்மி உள்ளிட்ட இன்னும் பல முக்கியஸ்தர்கள், பிரமுகர்கள், சமூக சேவையாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் கௌரவ அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றத்தின் நிகழ்ச்சித் திட்டப் பணிப்பாளருமான அஸாத், ஒற்;றுமையின்மை ஒழுக்கமின்னை ஆகிய நெறி பிறழ்வுகள் தற்காலத்தில் இளம் சமுதாயத்தனரிடையே அதிகரித்து வருகின்றது. இந்தப் போக்கு குடும்பத்திலும் பாடசாலையிலும் சமூகத்திலும் நாட்டிலும் சீரழிவுகளை எற்படுத்துகின்றது. சமூகத்தின் பலவீனமான ஒன்றாகவும் இவைகளைப் பார்க்க முடியும்.
எனவே இத்தகைய நிலைமைகளிலிருந்து இளம் சமுதாயத்தினரை மீட்டெடுத்து ஒழுக்க சீலர்களாகவும் ஒற்றுமைப்பட்டவர்களாகவும் மாற்றியமைப்பதில் இஸ்லாமிய வாலிபர் இயக்கம் சிறப்பாக முன்னேற்றகரமாக அர்ப்பணிப்போடு பணியாற்றிக் கொண்டு வருகின்றது.
ஒழுக்கமும் ஒற்றுமையும் குடும்பத்திலிருந்தே ஆரம்பிக்க வேண்டும் அடுத்தது பாடசாலை அதற்கடுத்தது சமூகம் எனவே இந்த மூன்று அமைப்புக்களும் சிறப்பாகப் பணியாற்றினால் எதிர்காலத்தில் ஆளுமையும் ஆற்றலும் கொண்ட சிறந்த தலைவர்களை இன்றைய இளம் சமுதாயத்திலிருந்து உருவாக்க முடியும்” என்றார்.
No comments: