அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் ஊடாக நாட்டை பிளவுப்படுத்துமாறு புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும், தமிழ் அரசியல் கட்சிகளும் ஜனாதிபதிக்கு கடுமையான அழுத்தம் பிரயோகிக்கின்றதாக முன்னாள் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரும், அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே அத்தியாவசிய பொருடக்ளின் விலை உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து வீதிக்கு இறங்கிய மக்கள் தேசியத்தை பாதுகாக்கவும் போராட்டத்தில் இறங்க வேண்டுமென அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
அத்துடன் 13ஆவது திருத்தம் ஊடாக நாட்டை பிளவுப்படுத்த ஒருபோதும் இடமளிக்க முடியாது எனவும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீள் எழுச்சிக்கான முயற்சிகள் சர்வதேச மட்டத்தில் முன்னெடுக்கப்படும் பின்னணியில் வட மாகாணத்திற்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்கினால் நாட்டின் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
No comments: