News Just In

1/18/2023 10:47:00 AM

மட்டக்களப்பு கள்ளியங்காடு "ஹப்பி கிட்ஸ் பஃன் வேல்ட்" சிறுவர் உலகத்தில் இடம்பெற்ற பொங்கல் விழா!!





மட்டக்களப்பு கள்ளியங்காட்டில் அமையப்பெற்றுள்ள "ஹப்பி கிட்ஸ் பஃன் வேல்ட்" சிறுவர் உலகத்தில் தைத்திருநாள் கொண்டாட்டம் மிக விமர்சையாக இடம்பெற்றது.

உழவர் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு உலக வாழ் தமிழர்கள் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் முகமாக தைப்பொங்களை கொண்டாடி வரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆலயங்கள், வீடுகள் மற்றும் வியாபார ஸ்தலங்கள் போன்றவற்றில் பொங்கல் பொங்கி இயற்கைக்கு நன்றி செலுத்தி வரும் நிலையில் "ஹப்பி கிட்ஸ் பஃன் வேல்ட்" சிறுவர் உலகத்திலும் பொங்கல் பொங்கி சூரிய பகவானுக்கு படைத்து சிறார்களுடன் மிக விமர்சையாக பொங்கல் விழா இடம்பெற்றது.

மட்டக்களப்பு பிள்ளையாரடி ஸ்ரீ விஸ்வரூப ஆஞ்சநேயர் ஆலயத்தில் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ உத்தம ஜெகதீஸ்வர குருக்கள் தலைமையில்
பொங்கல் விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றதுடன், ஆஞ்சநேயர் குறுப் ஒஃப் கம்பனியின் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.நிரோசன் மற்றும் "ஹப்பி கிட்ஸ் பஃன் வேல்ட்" சிறுவர் உலகத்தின் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்ததுடன், பொங்கள் உண்டு மகிழ்ந்தது மட்டுமல்லாது இவ்வாறானதொரு "சிறுவர் உலகம்" எனும் சிறுவர்களுக்கான களியாட்ட மையம் அமைந்திருப்பது தமது சிறார்களுக்கு கிடைத்த பெரும் கொடையென இங்கு பொழுதை கழிக்க சிறார்களுடன் வருகை தந்திருந்த பெற்றோர் பலரும் நிறுவனத்தின் உரிமையாளரை பாராட்டி நன்றியையும் தெரிவித்திருந்தனர்.

சிறுவர்களுக்கான உல்லாச உலகம் எனும் தொனிப்பொருளிற்கு அமைய 12 இற்கு மேற்பட்ட விளையாட்டுக் கூடங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட "ஹப்பி கிட்ஸ் பஃன் வேல்ட்" சிறுவர் உலகத்தில் வினோத விளையாட்டுக்களில் தங்களது பிள்ளைகளை மகிழ்விக்க விரும்பும் பெற்றோர் தங்களது பிள்ளைகளை இங்கு அழைத்து வந்து விளையாட்டுக் கூடங்களில் விளையாடலாம் என்பதையும் அனைவரது நன்மை கருதி பிரார்த்தனை அறைகூடம் மற்றும் நவீன வசதிகளைக் கொண்ட சிற்றுண்டிசாலை போன்ற அனைத்து வசதிகளும் இங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதையும் அதன் நிருவாகம் தெரிவித்துள்ளது.


No comments: