News Just In

1/11/2023 01:07:00 PM

தோல்வியில் முடிந்த தமிழ்க் கட்சிகளின் பேச்சுவார்த்தை! ரணிலின் அடுத்த நகர்வு என்ன ?





தமிழ் தேசியக்கட்சிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான தொடர் பேச்சுவார்த்தை ஒருநாளிலேயே முன்னேற்றம் இன்றி முடிவுக்கு வந்துள்ளது.இந்த பேச்சுவார்த்தை நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது, ஏற்கனவே தமிழ்க்கட்சிகள் முன்வைத்த, “படையினர் வசம் உள்ள காணிகள் விடுவிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை, மற்றும் காணாமல் போனோர் விடயம்” என்பவற்றுக்கு ரணில் விக்ரமசிங்க தரப்பில் இருந்து நேற்றைய தினம் பதில் எதுவும் வழங்கப்படவில்லை.

இந்தநிலையில், மேலும் ஒருவார கால அவகாசத்தை ஜனாதிபதியின் தரப்பு கோரியமைக்கு அமைய, பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

“முன்னதாக இந்த பேச்சுவார்த்தை நேற்று முதல் நான்கு நாட்களுக்கு தொடர்ச்சியாக இடம்பெறும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்திருந்தார்.

அத்துடன், எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதியன்று வரும் 75 வது சுதந்திர தினத்துக்கு முன்னர் இனப்பிரச்சினைக்கு தீர்வுக்காணப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருந்தார்.

இல்லையேல், 2040 ம் ஆண்டு வரை இந்தப்பிரச்சினை நீண்டுச் செல்லும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

பொருளாதார முன்னேற்றத்துக்கு நல்லிணக்க செயற்பாடுகள் முக்கியமானவை என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்” என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments: