மின்சாரக் கட்டணங்களுக்கான செலவுச் சீர்திருத்தத்துடன் கூடிய விலைச் சூத்திரத்தை தயாரிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், உரிய விலைச் சூத்திரத்திற்கான முன்மொழிவை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்த பின்னர், இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது.
No comments: