News Just In

1/20/2023 08:02:00 AM

பாடசாலை விடுமுறை: இலங்கை கல்வி அமைச்சின் புதிய அறிவிப்பு!

2022 ஆம் ஆண்டில், அரச பாடசாலைகள் மற்றும் அரசாங்க அனுசரணை பெற்ற (தமிழ் - சிங்கள) பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் 2ஆம் கட்டம் இன்றுடன் நிறைவடையவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும், முஸ்லிம் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் பெப்ரவரி 6 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில், அனைத்துப் பாடசாலைகளுக்குமான மூன்றாம் தவணைக்கான மூன்றாம் கட்டம் எதிர்வரும் பெப்ரவரி 20 ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


No comments: