நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் என இலங்கை மக்களுக்கு தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன் இலங்கையில் வெகுவிரைவில் திசைக்காட்டி ஆட்சி அமைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் சந்திப்பொன்றில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், நமது நாட்டை ஆள்வது யார்? மதுபான தொழிற்சாலை உரிமையாளர்கள், மணற் கடத்தல்கார்கள், மதுக்கடை உரிமையாளர்கள், கொள்ளையர்கள், குற்றவாளிகள் போன்றவர்களாவர்.
நெஞ்சில் ஈரம் இல்லாதவர்களால் இந்த நாடு ஆளப்பட்டது. உணர்ச்சியற்ற தலைவர்கள், மக்களின் சம்பளத்தில் கை வைக்க ஆரம்பித்து விட்டார்கள். தொழில்முறை பணியாளர்கள் 15 சதவீதம் உள்ளனர். அவர்களின் ஊதியத்திற்கு அதிக வரி விதிக்கப்படுகிறது.
வங்கிகளின் உயர்மட்ட அதிகாரிகள் 500 பேர் வரையில் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதத்தின் போது வைத்தியர்கள் 500 பேர் இந்நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
இவ்வாறு இவர்கள் நாட்டை விட்டு செல்வதால் நாடு பெரும் பின்னடைவை எதிர்கொள்ளும். வெகு சீக்கிரமே எமது திசைக்காட்டியின் அரசாங்கம் தோன்றும். எவரும் நாட்டைவிட்டு வெளியேற வேண்டாம் என கூறியுள்ளார்.
No comments: