நூருல் ஹுதா உமர்
சாய்ந்தமருது ARM பாலர் பாடசாலையின் 22 வது வருடாந்த பட்டமளிப்பு விழாவும் கலை நிகழ்ச்சியும் அப்பாடசாலையின் அதிபர் எம்.எச்.றிபாயா ஜாபீர் தலைமையில் சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.
குழந்தைச் செல்வங்களின் ஆடல் பாடல் உள்ளிட்ட கலைநிகழ்வுகளுடன் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக நாபீர் பௌண்டேசனின் ஸ்தாபகரும் பிரபல சமூக சிந்தனையாளருமான பொறியலாளர் கலாநிதி உதுமாங்கண்டு நாபீர் கலந்து கொண்டார். நிகழ்வுக்கு கௌரவ அதிதியாக பேராதனை பல்கலைக்கழக மெய்யியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் முபிஷால் அபூபக்கர் அவர்களும் விஷேட அதிதிகளாக கல்முனை வலய பாலர் கல்வி பணியகத்தின் கள உத்தியோகத்தர் ஐ.எல்.எம்.அனீஸ் அவர்களும் சாய்ந்தமருது மல்ஹர் ஸம்ஸ் மஹா வித்தியாலயத்தின் அதிபர் றிfப்க்கா அன்ஸார் அவர்களும் கலந்து கொண்டனர்.
நிகழ்வின்போது பிரதம அதிதி பொறியலாளர் கலாநிதி உதுமாங்கண்டு நாபீர் அவர்களால் சாய்ந்தமருது ARM பாலர் பாடசாலையின் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கி வைக்கப்பட்டது. இங்கு கருத்துத் தெரிவித்த நாபீர் பௌண்டேசனின் ஸ்தாபகர் நாபீர், மேடைக்கூச்சம் களைந்து தங்களது திறமைகளை மேடையேற்றிய குழந்தைச் செல்வங்களைப் பாராட்டியதுடன் குறித்த மாணவர்களை பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார். பொருளாதார ரீதியில் கஷ்ட்டத்தில் சிக்கியுள்ள நாட்டை மீட்பதற்கு சிறந்த கல்வியே பிரதானவழி என்று தெரிவித்த நாபீர், அதற்காக ஆசிரியர்களும் பெற்றோரும் பிரதான பங்காற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
No comments: