News Just In

12/26/2022 06:21:00 PM

மட்டக்களப்பி லும் சுனாமி உயிர் நீத்தவர்களை நினைவு கூர்ந்து விசேட பூஜை விசேட நிகழ்வுகள் இடம் பெற்றன!




(மொகமட் தஸ்ரிப் லத்தீப்)
சுனாமி கடல் பேரலையில் உயிர் நீ த்தவர்களை நினைவு கூர்ந்து மட்டக்களப்பு நாவலடி, பகுதியிலும் நினைவு தின நிகழ்வுகள் நடைபெற்றன

நாவலடி புண்ணியடி நவசக்தி இந்து ஆலயத்தின் குரு சிவ ஸ்ரீ லிகிதன் தலைமையில் மறைத்தவர்களை நினைவு கூர்ந்து நிகழ்வுகள் இடம் பெற்றன

நாவலடி பொது மண்டபத்துக்கு முன்பாக நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநில பேராயர் பொன்னையா ஜோசப் உட்பட சமய தலைவர்களும் அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டனர் இதன் போது உயிரிழத்தவர்களின் ஈடேற்றம் வேண்டி பிரார்த்தனை வழிபாடுகள் நடத்தப்பட்டன.




ஆழிப் பேரலையில் உயிர் நீத்தவர்களை நினைவு கூர்ந்து மட்டக்களப்பு டச் பார் பகுதியில் விசேட நினைவு தின நிகழ்வுகள் இடம் பெற்றன
டச் பார் புனித இன்னாசியார் தேவாலயத்தின் நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நினைவு தின நிகழ்வு தேவாலயத்தின் பங்குத்தந்தை வணக்கத்துக்குரிய லோரன்ஸ் லோகநாதன் தலைமையில் சமய நிகழ்வாக இடம் பெற்றது.

இதன் போது உயிர் நீத்தவர்களின் ஆத்மா ஈடேற்றம் வேண்டி விசேட பிரார்த்தனை வழிபாடுகளும் இடம் பெற்றன. மட்டக்களப்பு மறை மாநில ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசப் விசேட பிரார்த்தனை வழிபாடு களை நடத்தி வைத்தார்



சுனாமி கடல் பேரலையில் உயிர் நீ த்தவர்களை நினைவு கூர்ந்து மட்டக்களப்பு புதுமுகத்துவாரம் பகுதியிலும் நினைவு தின நிகழ்வுகள் இடம் பெற்றன.
கல்லடி புது முகத்துவாரம் பகுதியிலும் ஸ்ரீ சக்தி வேல் இந்து ஆலய குருசிவஸ்ரீ ரேகுலன் தலைமையில் கடல் பேரலையில் உயிர் நீ த்தவர்களை நினைவு கூர்ந்துவிசேட பிரார்த்தனை வழிபாடு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் சமய தலைவர்களும் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் இதன் போது உயிரிழத்தவர்களின் ஈடேற்றம் வேண்டி பிரார்த்தனை வழிபாடுகள் நடத்தப்பட்டன.

No comments: