News Just In

12/30/2022 06:41:00 PM

யாழில் திரண்ட கடற்தொழிலாளர்கள்!

இன்றைய தினம் கடற்தொழிலாளர்களால் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடலட்டைப் பண்ணை தங்களுக்கு தேவையென வலியுறுத்தி குறித்த பேரணி நடத்தப்பட்டுள்ளது.

பேரணியில் கலந்து கொண்டோர் கடலட்டை பண்ணை தொடர்பாக முன்வைக்கப்படும் விமர்சனங்கள் தொடர்பாக தங்கள் கண்டனத்தினை வெளிப்படுத்தினர்.

சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்கள் கலந்து கொண்ட இந்தப் பேரணி பண்ணைக் கடற்கரையில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தைச் சென்றடைந்து அங்கிருந்து ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் அலுவலகத்தை அடைந்தது.

பேரணியின் நிறைவில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கான மகஜர் கடற்றொழில் அமைச்சரின் பிரதிநிதிகளிடம் கையளிக்கப்பட்டது.

இதேவேளை, கடந்த காலங்களில் பல்வேறு தொழில் முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த போதிலும், தற்போதைய நிலையில், பொருளாதார சுமைகளை எதிர்கொள்ளுமளவிற்கு போதுமான வருமானத்தினை பெறமுடியாத நிலையில் உள்ளோம் என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.

நல்ல வருமானத்தை ஈட்டித் தரக்கூடிய கடலட்டைப் பண்ணை தங்களுக்கு தேவையென வலியுறுத்தியே தாங்கள் இப்போராட்டத்தை மேற்கொண்டதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

No comments: