News Just In

11/22/2022 07:41:00 AM

இலங்கையில் ஆசிரியர்களிடையே ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்! (புகைப்படம்)

இலங்கையில் உள்ள பல பாடசாலைகளின் ஆசிரியைகள் சேலைக்கு (சாரி) பதிலாக வேறு வசதியான ஆடைகளை அணிந்து இன்றைய தினம் (21-11-2022) பாடசாலைக்கு வருகை தந்துள்ளனர்.

அத்துடன், ஆசிரியர்கள் சிலர் சேர்ட்டுகளுக்கு பதிலாக டீசர்ட் அணிந்து பாடசாலை சென்றுள்ளனர்.

பெரும்பாலான ஆசிரியர் தமது புகைப்படங்களை இலகு ஆடைகள் அணிந்தாவாறு சமூகவலைத்தளங்களிலும் பதிவேற்றியுள்ளனர்.

தற்போது நாட்டில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் சேலை அணிவதற்கு அதிக செலவாவதன் காரணமாக வேறு உடைகள் அணிவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலினிடம் எமது செய்திப்பிரிவு வினவியபோது, எந்தவொரு ஆசிரியர் சங்கத்தினதும் அழுத்தத்தினால் ஆசிரியர்கள் குறித்த தீர்மானத்தை எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.

பொது நிர்வாகம் தொடர்பான 5/2022 சுற்றறிக்கையின் பிரகாரம் ஆசிரியர்களின் ஆடை உரிமைக்கு அமைவாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஆசிரியர்களின் உடையான சேலையை மாற்றுவது தொடர்பில் தாம் எவ்வித தீர்மானத்தையும் எடுக்கபோவதில்லையென கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் (Sunil Premajayantha) அண்மையில் நாடாளுமன்ற தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: