News Just In

10/17/2022 09:22:00 AM

அக்கரைப்பற்று ஜும்மாப்பெரிய பள்ளிவாசலில் மீலாத் தின நிகழ்வுகளும், உலமாக்கள் கௌரவிப்பும் !




நூருல் ஹுதா உமர்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த தினமான புனித மீலாதுன் நபி விழாவை முன்னிட்டு வருடா வருடம் அக்கரைப்பற்று ஜும்மாப்பெரிய பள்ளிவாசலில் இடம்பெறும் விசேட மௌலீத் இம்முறையும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (16) மாலை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் அக்கரைப்பற்று கிளை மற்றும் அக்கரைப்பற்று ஜும்மாப்பெரிய பள்ளிவாசல் இணை ஏற்பாட்டில் அக்கரைப்பற்று உலமா சபை தலைவர் மூத்த உலமா மௌலவி எம்.எம்.லத்திப் தலைமையில் பள்ளிவாசலில் இடம்பெற்றது.

மௌலவிமார்களின் மௌலித் முழக்கத்துடன் மார்க்க சொற்பொழிவும், மீலாத் தொடர்பிலான விளக்கங்களும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சிறப்புக்கள் தொடர்பிலும் இங்கு உலமாக்களினால் உரைகள் நிகழ்த்தப்பட்டது. நபிகள் காலத்திலும், ஸஹாபாக்கள் காலத்திலும் பள்ளிவாசல்கள் இயங்கிய விதம், ஆத்மீகத்தின் சிறப்புக்கள், பள்ளிவாசல்களை முஸ்லிங்கள் பயன்படுத்த வேண்டிய அவசியங்கள் தொடர்பிலும் திக்ர் செய்வது, ஸலவாத் கூறுவதன் நன்மைகள் தொடர்பிலும் இஸ்லாத்திற்கும் சமூங்கங்களுக்கும் உள்ள தொடர்புகள் பற்றியும் அக்கரைப்பற்று ஜும்மாப்பெரிய பள்ளிவாசல் தலைவர் எஸ்.எம். சபீஸ் விளக்கமான உரையொன்றை தனதுரையில் வழங்கினார்

அக்கரைப்பற்று ஜும்மாப்பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகளினால் மூத்த உலமாக்கள் பொன்னாடை போத்தி கௌரவிக்கப்பட்ட இந்நிகழ்வில் பிரதேசத்தில் எங்குமில்லாதவாறு உலமாக்கள், அக்கரைப்பற்று ஜும்மாப்பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள், மதரஸா மாணவர்கள், ஊர் பிரமுகர்கள், கல்விமான்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டதுடன் நிகழ்வின் இறுதியில் கந்தூரியும் வழங்கிவைக்கப்பட்டது.




No comments: