
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக நியமிப்பது தொடர்பில் பொதுஜன பெரமுனவிற்குள் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியுள்ளன.
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோரால் பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
தினேஷ் குணவர்தன தனது பிரதமர் பதவியை மஹிந்த ராஜபக்ஷவிடம் ஒப்படைக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாமல் ராஜபக்சவை அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தும் திட்டத்தை மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்து இந்த அரசியல் பிரச்சார திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
கடந்த காலங்களில் என்ன நடந்தாலும், மக்கள் பொதுஜன பெரமுனவுடன் இருக்கிறார்கள் என்ற பலமான நம்பிக்கையுடன் இந்த அரசியல் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலைமையை சில காலம் தக்கவைத்துக்கொண்டு நாமல் ராஜபக்சவை ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராகக் கொண்டு வருவதற்கு கட்சிக்குள்ளேயே சில எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
எப்படியிருப்பினும் இந்த சிரேஷ்ட பொறுப்புக்கு நாமல் ராஜபக்ஷ இன்னும் முதிர்ச்சியடைய வேண்டுமென அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
No comments: