News Just In

10/11/2022 07:34:00 AM

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டிகளில் பட்டிருப்பு கல்வி வலயம் சம்பியனாக தெரிவு!

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டிகளில் பட்டிருப்பு கல்வி வலயம் 194 புள்ளிகளைப் பெற்று சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்திலுள்ள பதினேழு கல்வி வலயங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகள் கந்தளாய் லீவாரத்தின பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த செவ்வாய்கிழமை (5) உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகின.

இதில் மூவாரத்திற்கும் மேற்பட்ட வீர வீராங்களைகள் பங்குபற்றியிருந்தார்கள்.

ஐந்து நாட்களாக நடைபெற்று முடிந்த விளையாட்டுப் போட்டிகளில் இறுதி நிகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை (9) நடைபெற்றன. இதில் கல்முனை கல்வி வலயம் 94 புள்ளிகளைப்பெற்று இரண்டாம் இடத்தையும்,கந்தாய் கல்வி வலயம் 88 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தையும்,அக்கறைப்பற்று கல்வி வலயம் 85புள்ளிகளைப் பெற்று நான்காம் இடத்தையும்,தெகியத்தகண்டி கல்வி வலயம் 82 புள்ளிகளைப் பெற்று ஐந்தாம் இடத்தையும்,அம்பாறை கல்வி வலயம் 68 புள்ளிகளைப் பெற்று ஆராம் இடத்தையும் ,கிண்ணியா கல்வி வலயம் 64 புள்ளிகளைப் பெற்று ஏழாம் இடத்தையும்,திருகோணமலை கல்வி வலயம் 59 புள்ளிகளைப் பெற்று எட்டாவது இடத்தையும்,மட்டக்களப்பு கல்வி வலயம் 55புள்ளிகளைப் பெற்று ஒன்பதாம் இடத்தையும், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் 53 புள்ளிகளைப் பெற்று பத்தாவது இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளது.

மட்டக்களப்பு மத்தி(52), திருக்கோவில்(45), மகோயா(33), திருகோணமலை வடக்கு(15), மற்றும் முதூர்(15), கல்குடா(8), சம்மாந்துறை(5), போன்ற கல்வி வலயங்கள் முறையே பதினொன்றிலிருந்து பதினேழு வரை தெகிவாகியிருந்தன. முதல் மூன்று இடங்களைப் பெற்ற கல்வி வலயங்களுக்கு பணப்பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இறுதி நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி புள்ளைநாயகம்,கந்தளாய் வலக்கல்விப் பணிப்பாளர் ஏ.டபிள்யு. தருமத்திலக்க, கிண்ணியா, பட்டிருப்பு, மற்றும் மூதூர், திருகோணமலை போன்ற கல்வி வலயங்களின் உடற்கல்வி பணிப்பாளர்கள் உட்பட அதிபர்கள், ஆசிரியர்கள் பெருந்திரலான வீர வீராங்கனைகளும் கலந்து சிறப்பித்தார்கள்.

எப்.முபாரக்

No comments: