News Just In

9/28/2022 07:39:00 AM

ரஷ்ய அதிபர் புடினின் உத்தரவால் கொதித்தெழுந்த அமெரிக்கா!

அமெரிக்க உளவு இரகசியங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய கணிணி பொறியாளருக்கு ரஷ்ய அரசாங்கம் குடியுரிமை வழங்கியுள்ளது.

அமெரிக்க உளவு அமைப்பான என்.எஸ்.ஏ.வில் பணியாற்றிய எட்வர்டு ஸ்னோடென், கடந்த 2013 ஆம் ஆண்டு அமெரிக்க உளவு இரகசியங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் அவரை தேடப்படும் குற்றவாளியாக அமெரிக்கா அறிவித்தது.

இதனால்,, அவர் பல ஆண்டுகளாக ரஷ்யாவில் தஞ்சமடைந்து வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் எட்வர்டு ஸ்னோடென்னுக்கு ரஷ்யாவில் தங்க நிரந்தர குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதற்கான உத்தரவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir Putin) கையெழுத்திட்டுள்ளார். ரஷ்யாவின் இந்த செயல் அமெரிக்காவின் கோபத்தை அதிகப்படுத்தியுள்ளது.

No comments: