News Just In

9/16/2022 10:49:00 AM

இன்றுவரை நான்தான் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையில் உபதவிசாளர் - றஞ்சினி.





- ஏ.எச்.ஏ. ஹுஸைன்

கடந்த 2018.02.10 ஆம் திகதி நடைபெற்ற உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தற்குட்பட்ட கோட்டைக்கல்லாறு வட்டாரத்தில் தமிழரசுக் கட்சி சார்பாக போட்டியிட்டு, வெற்றிபெற்றேன். இந்நிலையில் எமது பிரதேச சபையின் உப தவிசாளராகவும் தெரிவு செய்யப்பட்டேன். 2018 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரைக்கும் நான்தான் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையில் உப தவிசாளராக இருந்து செயற்பட்டு வருகின்றேன்.

என மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் உப தவிசாளர் திருமதி.றஞ்ஜினி கனகராசா தெரிவித்துள்ளார். களுதாவளையில் அமைந்துள்ள பிரதேச சபையில் அமைந்துள்ள அவரது காரியாலயத்தில் வியாழக்கிழமை(15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…..

இந்நிலையில் நான் எனது சொந்த விடையம் காரணமாக திடீரென கடந்த 2022.07.05 அன்று தவிசாளருக்கு அறிவித்து விட்டு வெளிநாடு சென்றிருந்தேன். 1987 ஆம் ஆண்டு 15 இலக் பிரதேச சபைச் சட்டத்தின்படி கடமையிலிருக்கின்ற உப தவிசாளர் அல்லது தவிசாளர் யாராயினும் அவர்கள் பதவியை நேரடியாக தேர்தல் ஆணையாளரிம் சென்று இராஜினாமா செய்திருக்க வேண்டும், அல்லது உரிய நபர் மரணித்திரக்க வேண்டும், அல்லது அவர் தொடற்சியாக அறவித்தலின்றி மூன்று சபை அமர்வுகளுக்கு கலந்து கொள்ளாதிருந்திருக்க வேண்டும். இவ்வாறு எதுவும் நடைபெறாமலுள்ள இந்நிலையில் உப தவிசாளரான நான் இருக்கும் இத்தருணத்தில் எமது சபையில் உள்ள பிறிதொரு உறுப்பினரை ஏனைய உறுப்பினர்கள் ஒன்றிணைந்து தற்காலிக உப தவிசாளராக நியமித்திருந்தார்கள். இது அவர்களின் அறியாமையாகும்.

1987ஆம் ஆண்டு 15ஆம் இலக்க உள்ளுராட்சி சட்டத்தின்படி உரிய பதவி வகிக்கும் உறுப்பினர் இராஜினாமா செய்யுமிடத்து, தேர்தல் ஆணையாளர் உள்ளுராட்சி ஆணையாளருக்கு அறிவித்ததன் பின்னர் உள்ளுராட்சி ஆணையாளர் பிரதேச சபைக்கு வந்து அவர் முன்னிலையில் தெரிவு இடம்பெறல் வேண்டும். அல்லது உள்ளுராட்சி உதவி ஆணையாளர் சபைக்கு வந்து அவர் முன்னிலையில்தான் உரிய வெற்றிடமான பதவிக்கு உறுப்பினர்களிடமிருந்து தெரிவு செய்யப்படல் வேண்டும் என்பதுதான் சட்டமாகும். இது எதுவும் நடைபெறாமல் எமது சபைக்கு உப தவிசாளராக நான் உத்தியோகபூர்வமாக இருக்கையில் தற்காலிகமாகவேனும் அவ்வாறு ஒரு தெரிவை சட்டத்தின்படி மேற்கொள்ள முடியாது. இதனை நினைத்து வெட்கப்படுகின்றேன்.

உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு பல அமைப்புக்கள் உள்ளுராட்சி மன்றத்தின் செயற்பாடுகள் தொடர்பில் பல கருத்தரங்குகளை வைத்து அது தொடர்பாக சட்டப் புத்தகங்களையும் வழங்கியுள்ளார்கள். இவ்வாறு இருந்தும் எமது சபையில் தற்காலிக உபதவிசாளர் ஒருவரைத் தெரிவு செய்து அவமானப்படுத்தியதாகத்தான் நான் கருதுகின்றேன். எனவே அன்றிலிருந்து இன்றுவரை நான்தான் இந்த பிரதேச சபையில் உபதவிசாளராக இருந்து செயற்பட்டு வருகின்றேன். சட்டத்தின்படி எனக்கு வழங்கப்பட்ட பதவியை வேறு எவரும் கைப்பற்ற முடியாது. தற்காலிகமாக உப தவிசாளராக தெரிவு செய்யப்பட்டதாக கருதப்படும் உறுப்பினர் நான் இல்லாத காலத்தில் உபதவிசாளர் என்ற பதவியை வைத்து எந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டாரோ அதனை மீளப்பெற வேண்டும் என்ற கோரிக்கையை நான் வியாழக்கிழமை(15) நடைபெற்ற சபை அமர்வின்போதும் முன்வைத்துள்ளதோடு, இனிமேலும் அவர் தொடர்ந்து தற்காலிக உபதவிசாரளாக இயங்கமாட்டார் என நினைக்கின்றேன். அவ்வாறு அவர் இயங்கினால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் நான் தயாராக இருக்கின்றேன்.

எனவே மக்கள் அரசியலில் கௌரவம் என்ற சொல்லுக்கு மதிப்பளிக்கக்கூடி தகுதியானவர்களை மக்கள் தெரிவு செய்யவேண்டும். அவ்வாறானவர்களை மக்கள் தெரிவு செய்தால் இவ்வாறான பிழைகள் இடம்பெறாது. மக்கள் இனிவரும் தேர்தல்களில் மக்களோடு மக்களாக இருந்த சேவை செய்யக்கூடியவர்களைத் தேர்வு செய்யவேண்டும். என அவர்
இ தன்போது மேலும் தெரிவித்தார

No comments: