News Just In

9/04/2022 07:33:00 AM

கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வருவதற்கு ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு!

நாடு திரும்பியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வருவதற்கு ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில்,முன்னாள் ஜனாதிபதியை நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்து அவருக்கு பிரதமர் பதவி வழங்க வேண்டும் என மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான குடும்ப உறுப்பினர்கள் குழுவிடம் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழு யோசனை முன்வைத்துள்ளது.

இருப்பினும் , அதற்கு மகிந்த குடும்பத்தினர் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்போது கோட்டாபய ராஜபக்ச அரசியலில் ஈடுபட்டு தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்காமல் சுதந்திரமாக வாழ்வதையே இன்று செய்ய வேண்டும் என மகிந்த தெரிவித்துள்ளார்.

நேற்று, இரவு நாடு திரும்பிய கோட்டாபய ராஜபக்சவை வரவேற்க சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்களில் நாமல் ராஜபக்ச அல்லது குடும்ப உறுப்பினர்கள் எவரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வரக்கூடாது என்பதே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையான கருத்தாகியுள்ளதென தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: