News Just In

7/05/2022 06:24:00 AM

மக்களுக்கும் விவசாயிகளுக்கும் முன்னுரிமையளிக்கும் மட்டக்களப்பு IOC எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் - தேசபந்து செல்வராசா!!

நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருளை பெற்றுக்கொள்வதில் பல்வேறு சிரமங்களை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.

அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் அரச பெற்ரோலிய கூட்டுத்தாபன எரிபொருள் நிலையங்களிலிருந்து எரிபொருளை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும் சாதாரண மக்களும், விவசாயிகளும் எரிபொருளை பெற்றுக்கொள்வதில் பல்வேறு சிரமங்களை தொடர்ந்தும் எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்நிலைமையை கருத்தில்கொண்டு சமூக செயற்பாட்டாளரும் தொழிலதிபரும் மட்டக்களப்பு வர்தக சங்க தலைவருமா தேசபந்து எம்.செல்வராசா அவர்கள் மட்டக்களப்பு ஐ.ஓ.சீ எரிபொருள் நிலையத்தினூடாக அன்றாடம் ஆட்டோ ஓட்டி தமது ஜீபனேபாயத்தை மேற்கொள்ளும் ஆட்டோ சாரதிகள், விவசாயிகள், ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில், தொடர்ச்சியாக எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

இவ் எரிபொருள் வினியோக நடவடிக்கை குறித்து பொதுமக்களும், விவசாயிகளும் ஊடகவியலாளர்களும் தமது நன்றி பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அதே வேளை குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊடாக விவசாயிகளின் துயரை அறிந்த எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் நேற்று  முன்தினம் 50 விவசாயிகளுக்கு எரிபொருள் வழங்கியதனை முன்னிட்டு நன்றி கூறும் முகமாக நேற்று மட்டக்களப்பு மாவட்ட தமிழ் விவசாய சமூகத்தினால் சுமார் 3000 பொதுமக்கள் உட்பட எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடமையாற்றும் முப்படையினர் உள்ளிட்ட அனைவருக்கும் பாற்சோறு வழங்கியதுடன், கடமையில் ஈடுபட்ட படையினர் உள்ளிட்ட அனைவருக்கும் பசும்பாலும் வழங்கியிருந்தனர்.

இன்று இரண்டாவது நாளாகவும் சுற்றுலாப் பிரயாணிகளுக்கும், கற்பிணித்தாய்மாருக்கும், விசேட தேவையுடையவர்களுக்குமாக முன்னுரிமை அடிப்படையில் எரிபொருளை வழங்கியமையானது சிறந்ததொரு மனிதாபிமான செயற்பாடாக மட்டக்களப்பு மக்களால் பார்க்கப்பட்டது மட்டுமல்லாது, குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளரான முத்துக்குமார் செல்வராசா அவர்களுக்கு குறித்த எரிபொருள் நிலையத்திற்கு வருகை தந்த விவசாயிகள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் உள்ளிட்ட பலரும் தமது பாராட்டையும், நன்றியையும் தெரிவித்திருந்தனர்.

இராணுவத்தினரும், பொலிஸாரும் கடமையில் ஈடுபட்டிருந்ததுடன், சீரான முறையில் எரிபொருள் விநியோகிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments: