News Just In

7/06/2022 11:04:00 AM

நாட்டில் மீண்டும் கொவிட் பரவல் ! அவதானம்!





புதிய பிறழ்வுடன் நாட்டில் மீண்டும் கொவிட் தொற்று தலைதூக்கும் அவதானம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதிலிருந்து மீள்வதற்கு கொவிட் தடுப்பூசிகள் நான்கு டோஸ்களையும் பெற்றுக் கொள்ள வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

"கொவிட தொற்று முடியவில்லை - 4 ஆவது தடுப்பூசியை பெறுவோம்" என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

உண்மையில் கொவிட தொற்று முழுவதுமாக கட்டுப்பாட்டுக்கு வரவில்லை. முதன்மை தடுப்பூசியை பெற்றவர்கள் மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசியையும் பெறுமாறு முன்னர் நாம் கூறியிருந்தோம். இவ்வாறு பூஸ்டர் தடுப்பூசியை பெற்றவர்களைதான் நாம் நான்காவது தடுப்பூசியையும் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். தற்போது இலங்கையினுள் 20 வயதுக்கும் அதிகமானோருக்கு வெற்றிகரமாக முதன்மை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நூற்றுக்கு 97 சதவீதமானவர்களுக்கு. எனினும் பூஸ்டர் தடுப்பூசி நூற்றுக்கு 7.9 சதவீதமானவர்களுக்கு மாத்திரமே போடப்படடுள்ளது.


No comments: