புதிய அமைச்சரவை நாளை காலை நியமிக்கப்படவுள்ளதாக அதிபர் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு அதிபர் ஊடகப்பிரிவு இதனை அறிவித்துள்ளது.
இதேவேளை, நாளை அலரிமாளிகையில் குறித்த அமைச்சரவை நியமனம் இடம்பெறவுள்ளது.
நாளை 20 முதல் 25 பேர் கொண்ட புதிய அமைச்சரவை நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதில் அதிகளவான இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு புதிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, நாடாளுமன்றத்தில் அனைத்து தரப்பினரும் இணைந்து செயற்பட முன்வர வேண்டும் எனவும் அதிபர் ரணில் விகிரமசிங்க நேற்று பகிரங்கமாக கோரிக்கை விடுத்திருந்தார்.
No comments: