News Just In

7/25/2022 08:07:00 PM

நாளைய மின்வெட்டு நடைமுறைப்படும் நேர அட்டவணை!

நாட்டில் நாளைய தினம்(25) மின்வெட்டு நடைமுறைப்படும் நேர அட்டவணையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

இதேவேளை, நாளைய தினம் 3 மணித்தியாலங்கள் மின் துண்டிப்பு நடைமுறைப்படவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில், காலையில் 1 மணித்தியாலமும் 40 நிமிடங்களும், இரவில் 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

இதேவேளை, கொழும்பு முன்னுரிமை வலயங்களில் காலை 6 மணி முதல் 8.30 மணிவரையான காலப்பகுதியில் 2 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் மின் துண்டிப்பு நடைமுறைப்படவுள்ளது.

மேலும், M,N,O,X,Y,Z ஆகிய வலயங்களில் அதிகாலை 5.30 மணிமுதல் காலை 8.30 மணிவரையான காலப்பகுதியில் 3 மணித்தியாலங்கள் மின் துண்டிக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.



No comments: