News Just In

6/21/2022 12:19:00 PM

மக்கள், எரிபொருளை பெற்றுக் கொள்ள சரியான பொறிமுறையை உருவாக்காவிட்டால் நாடு மேலும் பின்னோக்கிச் செல்லும் என மூதூர் பிரதேச சபை உப தவிசாளர் சி.துரைநாயகம் தெரிவிப்பு.




எப்.முபாரக்

மக்கள், எரிபொருளை பெற்றுக் கொள்ள சரியான பொறிமுறையை உருவாக்காவிட்டால் நாடு மேலும் பின்னோக்கிச் செல்லும் என மூதூர் பிரதேச சபை உப தவிசாளர் சி.துரைநாயகம் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக நாள்கணக்காக வரிசையில் நிற்கின்றார்கள் இதனால் அவர்களுடைய பெறுமதியான நேரம் வீணடிக்கப்படகின்றது. இது நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும். அதுமட்டுமல்லால் உற்பத்தி மற்றும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு பொறிமுறையின்கீழ் எரிபொருள் வழங்கப்பட வேண்டும் இல்லாவிட்டால் மேலும் பல உயிரிழப்புகளை நாம் எதிர்கொள்ள நேரிடும்.

நாட்டு மக்களின் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு எரிபொருள் கிடைக்காவிட்டாலும் கிடைக்கின்ற எரிபொருளை சரியான பங்கீட்டு செயற்திட்டத்தின் ஊடாக வழங்குவதன் மூலம் ஒவ்வொருவரும் அதனை சிக்கனமாக பயன்படுத்துவதற்கான வாய்ப்பு ஏற்படும் அத்துடன் பதுக்குவதற்கான வாய்ப்பும் குறைக்கப்படும். இதைவிட அனைவருடைய பெறுமதியான நேரமும் பாதுகாக்கப்படும். இன்றைய இக்கட்டான சூழலில் நாம் அனைவரும் எமது ஒவ்வொரு நிமிடத்தையும் எமது பொருளாதாரத்தை கட்டியெழுப்பவதன் ஊடாக நாட்டினது பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக பயன்படுத்த வேண்டியது அவசியம்.

அரசாங்கம் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மக்கள் மற்றும் ஏனைய விடையங்களின் தேவையை கருத்தில் கொண்டு விநியோகிக்கக்கூடிய எரிபொருளின் அளவினை தீர்மானித்து ஒவ்வொருவருக்கும் தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தை வைத்து வாரத்தில் ஒரு நாளை வழங்கி வாராந்த அடிப்படையில் சரியான ஒரு பொறிமுறையின் ஊடாக எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் அந்த எரிபொருளை அந்த வாரம் முழுவதும் சிக்கமாக பயன்படுத்துவததோடு வரிசையில் நிற்கின்ற நபர்களினதும், நேரத்தினதும் அளவு குறைவடையும் இல்லாவிட்டால் மக்களுடைய பெறுமதியான நேரம் வீணடிக்கப்பட்டு நாடு மேலும் பின்னோக்கிச் செல்வதை தவிர்க்க முடியாது என குறிப்பிட்டார்.


No comments: