
இது தொடர்பிலான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் நீண்ட நேரமாக பெட்ரோல் பெற்றுக்கொள்ள வரிசையில் காத்திருந்த நிலையில், திடீரென முச்சக்கர வண்டி நடுவீதியில் நின்றுள்ளது.
இதன்போது தனது முச்சக்கரவண்டியின் எரிபொருள் தாங்கியை கழற்றிக்கொண்டு, முச்சக்கரவண்டியின் இலக்கத் தகட்டையும் கழற்றி கழுத்தில் மாட்டிக்கொண்டு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சென்று தாங்கியில் பெட்ரோல் நிரப்பி சென்றுள்ளார்.
எரிபொருள் நிரப்பப்படாததால் பிரதான வீதியில் திடீரென நின்ற தனது முச்சக்கரவண்டிக்கு எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக இந்த முறையை பயன்படுத்தியதாகவும் முச்சக்கரவண்டி சாரதி தெரிவித்துள்ளார்.
No comments: