News Just In

6/22/2022 10:36:00 AM

மனித உரிமை ஆணைக்குழுவுடன் இணைந்து செல்ல சம்மதித்த இலங்கை!!




இலங்கை தொடர்பான மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானங்களுடன் இணங்கிச் செல்லும் நிலைப்பாடொன்றை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சிங்கள தினசரியான திவயின செய்திப் பத்திரிகை விசேட செய்தியொன்றை வெளியிட்டுள்ளது. குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஜெனீவா அமர்வுகள் தொடர்பான விவகாரங்களில் இணங்கிப் போகும் நிலைப்பாட்டை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது போர் நிறைவுற்றதன் பின்னர் சுமார் 13 வருடங்கள் கழிந்த நிலையில் இலங்கை மேற்படி நிலைப்பாட்டுக்கு வந்துள்ளது.

இணக்கம் தெரிவித்துள்ள இலங்கை
அதன் பிரகாரம் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சர்வதேச செயற்பாடுகளுக்கு அமைவாக செயற்பட இலங்கை இணக்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் மிசல் பச்லெட்க்கு இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்தவுடன் ஜெனீவா பிரேரணைகளில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்திருந்தது.

ஆனாலும் தற்போதைக்கு ஜெனீவா பிரேரணைகளின் இணங்கிப் போக சம்மதம் தெரிவித்திருப்பதுடன் எதிர்வரும் செப்டம்பரில் பிரித்தானியா உள்ளி்ட்ட ஐந்து நாடுகள் இலங்கைக்கு எதிராக முன்வைக்கவுள்ள பிரேரணை தொடர்பில் குறித்த நாடுகளுடன் இலங்கை பேச்சுவார்த்தைகளையும் ஆரம்பித்துள்ளது என்றும் குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: