ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக தாழங்குடாவைச் சேர்ந்த பிரபல ஆசிரியரும் முன்னாள் அதிபருமான பிரான்சிஸ் மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் முகாமைத்துவ குழுவின் பரிந்துரையின் பேரில் கட்சியின் செயற்குழுவின் அங்கீகாரத்துடன் நேற்று 05/06/2022 திகதி எதிர் கட்சி அலுவலகத்தில் வைத்து இவருக்கான நியமனக்கடிதம் எதிர் கட்சி தலைவரும் கட்சியின் தலைவருமான சஜித் பிரேமதாச அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதன்போது கட்சியின் பொதுச் செயலாளர் மத்தும பண்டார உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
கடந்த காலங்களில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்காக மட்டக்களப்பில் சிறந்த முறையில் செயற்பட்டமையினால் குறித்த நியமனம் இவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக கட்சியின் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்தோடு கடந்த பாராளுமன்ற தேர்தலில் இவர் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு அதிகளவிலான வாக்குகளை பெற்றுக்கொடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments: