அமெரிக்காவில் வழமையான ரோந்து பணியில் ஈடுபட்டவேளை போர் விமானம் விழுந்து நொறுங்கி விபத்தில் சிக்கியதில் விமானி பலியானார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் பெர்ஸ்னோ நகரில் உள்ள லெமூர் கடற்படை விமான நிலையத்தில் இருந்து கடற்படைக்கு சொந்தமான 'எப்-ஏ-18இ சூப்பர் ஹார்னெட்' ரக போர் விமானம் ஒன்று வழக்கமான ரோந்து பணிக்காக புறப்பட்டு சென்றது.
விமானத்தில் ஒரு விமானி மட்டும் இருந்தார். இந்த விமானம் சான் பெர்னார்டினோ நகரில் உள்ள மொஜாவே பாலைவன பகுதிக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது சற்றும் எதிர்பாராதவிதமாக தரையில் விழுந்து நொறுங்கியது.
இந்த கோர விபத்தில் விமானி சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவராத நிலையில் இது குறித்து விரிவான விசாரணை நடத்த அமெரிக்க கடற்படை உத்தரவிட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments: