News Just In

6/20/2022 01:27:00 PM

இந்தியாவால் வழங்கப்படவுள்ள யூரியா உரம் 6ஆம் திகதி நாட்டுக்கு கொண்டுவரப்படும் – விவசாய அமைச்சர்





இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள 65,000 மெற்றிக் தொன் யூரியா உரம் எதிர்வரும் ஜூலை மாதம் 06ஆம் திகதி இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக விவசாய மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டு மற்றும் 2023 ஆம் ஆண்டு மகா பருவத்தில் உர விநியோகத்திற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான கலந்துரையாடலின்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, விவசாயிகளுக்கு நெற்செய்கைக்கு 50,000 மெற்றிக் தொன் உரமும் சோளச் செய்கைக்கு 10,000 மெற்றிக் தொன் உரமும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் 6ஆம் திகதி யூரியா உரம் கிடைத்து சில நாட்களில் விவசாயிகளுக்கு விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உர விநியோகத் திட்டத்தின் வெற்றிக்காக ஒவ்வொரு அதிகாரியும் ஒவ்வொரு நிறுவனமும் உழைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

முறைகேடுகள் நடக்காமல் பார்த்துக்கொள்வது அதிகாரிகளின் பொறுப்பு என்றும் பொறுப்பு வாய்ந்த அதிகாரியினால் ஏதேனும் தவறுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக அந்தஸ்து பாராமல் சட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்

No comments: