கிளிநொச்சி - அம்பாள் குளம் பகுதியில் இன்று மதுபோதையில் சென்ற குழுவினரால் நான்கு பேர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த நான்கு பேரும் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி - கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அம்பாள் குளம் பகுதியில் நீண்ட காலமாக வசித்து வரும் குடும்பமொன்றின் வீட்டிற்குள் 14 பேர் கொண்ட குழுவினர் அத்துமீறி நுழைந்து கத்தி மற்றும் கூரிய ஆயுதங்களுடன் 3,12 வயதுடைய குழந்தைகள் மற்றும் அவரது தாய் ஆகியோர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
No comments: