சீனாவில் 3 முதல் 6 வயது வரையிலான சிறுவர், சிறுமிகளுக்கான பாடசாலை பாட புத்தகத்தில் ஆபாச படங்கள் இடம் பெற்றிருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த படங்கள் இனரீதியான மற்றும் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் பாடசாலை குழந்தைகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. இதில் சில படங்கள் பார்ப்பதற்கு ஆபாசமாக இருப்பதாக பொதுமக்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
பாட புத்தகங்களில் இடம்பெற்றுள்ள புகைப்படங்களில் சிறுவர், சிறுமிகள் ஆபாச நடவடிக்கைகளில் ஈடுபடுவது போல வரையப்பட்டிருந்தது.
மேலும் குழந்தைகள் நாக்கு வெளியே தள்ளி கொண்டும், கோணலான வாயை வைத்துக்கொண்டும், ஓரப்பார்வை பார்த்துக்கொண்டும் இருப்பது போல ஆபாச சமிக்ஞைகளை வெளிப்படுத்தும் காட்சிகளும் இடம்பெற்றிருந்தன. சிலர் அமெரிக்க தேசிய கொடியை ஆடையாக அணிந்தபடி உள்ளன.
இது தொடர்பில் புகார் தெரிவித்துள்ள மக்கள், இந்த பாட புத்தகங்கள் முறையாக, படித்து பார்க்கப்படாமல், மறுஆய்வு செய்யப்படாமல் இருந்துள்ளது வெளிவந்திருக்கிறது என குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த பாடசாலை பாடபுத்தகங்கள் சர்ச்சை குறித்து ஆய்வு நடத்தும்படி சீன கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
No comments: