யாழ். ஆரியகுளத்தில் வெசாக் கூடு கட்டுவதற்கு இராணுவத்தால் விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் ஆளுநரின் முடிவு அப்பகுதி மக்கள் மத்தியில் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாழ். ஆரியகுளத்தில் வெசாக் கூடு கட்டுவதற்கு இராணுவத்தால் விடுக்கப்பட்ட கோரிக்கை யாழ்ப்பாணம் மாநகர சபையால் நிராகரிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, ஆரியகுளத்தில் வெசாக் கூடு கட்டுவதற்கு அனுமதிக்காவிட்டால் யாழ்.மாநகர சபையை கலைக்க நேரிடும் என வடக்கு மாகாண ஆளுநரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
அத்துடன்டு ஆரியகுளத்தில் வெசாக் கூடு கட்டுவதற்கு இராணுவத்தின் கோரிக்கைக்கு உடனடியாக அனுமதியை வழங்குமாறும் வடக்கு மாகாண ஆளுநரால் கட்டளையிடப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து மாநகர சபை உறுப்பினர்கள் இணைய வழி ஊடாக சந்தித்து இந்த விடயம் குறித்து கலந்துரையாடியுள்ளதுடன், சபை கலைக்கப்பட்டாலும் பிரச்சினை இல்லை என்றும், சபை தீர்மானத்தை மீற முடியாது என்றும் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளதுடன், முறைப்படி எழுத்து மூல கோரிக்கையை முன்வைத்தால் வேறு வழிகள் குறித்து பரிசீலனை செய்வதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
குறித்த சம்பவம் தொடர்பிலான ஆளுநரின் செயற்பாடு அப்பகுதி மக்களிடையே பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: