அலரிமாளிகைக்கு முன்பாக கடந்த 09 ஆம் திகதி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களை தாக்கிய குற்றச்சாட்டில் மொரட்டுவை மாநகர சபையின் ஊழியர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (15) கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் மொரட்டுவெல்ல பிரதேசத்தை சேர்ந்த 49 வயதுடையவர்.
அலரிமாளிகைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த குழுவினரை தாக்கும் காணொளி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
No comments: