கனடாவில் கடந்த சனிக்கிழமை, சிறிய ரக விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளாகி நால்வர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது அந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இதன்படி அந்த விமான விபத்தில் பலியானவர்கள் சாதாரண நபர்கள் அல்ல எனவும் அவர்கள் பாரிய குற்றப்பின்னணி கொண்டவர்கள் எனவும் தற்போது தெரிய வந்துள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவர் Gene Karl Lahrkamp என்பவர். இவர் ஒரு சர்வதேச குற்றவாளி. பணத்துக்கு கொலை செய்பவர். அவருடன் கிடைத்த மற்றொரு உடல் Matthew Dupre (36) என்பவருக்குச் சொந்தமானது. கனேடிய இராணுவ பின்னணி கொண்ட இந்த இருவரும், இராணுவத்திலிருந்து விடுவிக்கப்பட்டபின், சென்று, இந்திய கேங்ஸ்டரான Jimi Sandhu என்ற நபரை சுட்டுக் கொன்றதாக தாய்லாந்து காவல்துறையினர் குற்றம் சாட்டியுள்ளார்கள்.இருவர் மீதும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் உயிரிழந்த மூன்றாவது நபர் Duncan Bailey (37) என்பவர். இவர் வான்கூவரில் 2020 ஒக்டோபர் 6ஆம் திகதி, Mir Hussain என்பவர் சுடப்பட்ட வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்தவர். இந்த Mir Hussain அன்று உயிர் தப்பினாலும், 2021ஆம் ஆண்டு மே மாதம் சுட்டுக்கொல்லப்பட்டுவிட்டார். அந்த வழக்கு நடைபெற்று வருகிறது.
விபத்தில் உயிரிழந்த நான்காவது நபர் Hankun Hong (27) என்பவர், இவர் Richmondஐச் சேர்ந்தவர். விபத்தில் பலியானவர்களில் இருவர் தேடப்படும் குற்றவாளிகள் என்பதால், இந்த நால்வருக்குள்ளும் என்ன தொடர்பு, அவர்கள் என்ன நோக்கத்துகாக ஒன்றிணைந்தார்கள், குற்றச்செயல் எதையாவது செய்வதற்காக அவர்கள் திட்டமிட்டிருந்தார்களா என்பதை அறிவதற்காக காவல்துறையினர் பரபரப்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments: