ரஷ்ய அரச தலைவர் புடினின் ஆயுட்காலம் தொடர்பில் அந்நாட்டின் உளவாளி ஒருவர் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
இதன்படி ரஷ்ய அரச தலைவர் விளாடிமிர் புடினுக்கு புற்றுநோயின் தீவிரம் அதிகரித்து வருவதால், அவர் அதிகபட்சம் இன்னும் 3 ஆண்டுகள் தான் வாழலாம் என ரஷ்யாவின் FSB உளவாளி Boris Karpichkov கூறியுள்ளார்.
மேலும், புடின் தனது பார்வையை இழந்துவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
புடினின் உடல்நிலை மோசமடைந்து வருவதென்ற செய்தி கிரெம்ளினின் உள்வட்டத்தில் இருந்து தொடர்ந்து கசிந்து வருகிறது.
இம்மாத தொடக்கத்தில் புடினுக்கு வெற்றிகரமாக புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை நடந்து முடிந்ததாகவும், அதனைத் தொடர்ந்து அவர் மருத்துவர்களின் அறிவுரைகளின்படி மிகவும் அவசியமான சிகிச்சைகளை பெற்றுவருவதாக General SVR எனும் Telegram சனலில் செய்தி வெளியானது.
மேலும் பார்க்கின்சன் நோய் இருப்பதை மேலும் நிரூபிக்கும் விதமாக, பெலாரஸ் நாட்டின் அதிபர் Alexander Lukashenko-உடனான சந்திப்பில், புடின் தனது இடது காலை சுழற்றிக்கொண்டே இருந்தார் என்றும் செய்திகள் வெளியாயின. மேலும் அது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி வைரலானது.
No comments: