இன்று பதவியேற்றுள்ள புதிய அமைச்சரவைக்கு சம்பளம் வழங்கப்படாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அமைச்சர்களின் சிறப்புரிமைகளை குறைப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக பிரதமர் தனது உத்தியோகபூர்வ முகநூல் தளத்தில் பதிவொன்றை இட்டு குறிப்பிட்டுள்ளார்.
சர்வகட்சி அரசாங்கத்தின் ஒன்பது புதிய அமைச்சரவை அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
புதிய அமைச்சரவை அமைச்சர்களுக்கு சம்பளம் வழங்கப்பட மாட்டாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளும் குறைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
முன்னதாக, பிரதமர் அலுவலகத்தின் செலவுகளை பாதியாகக் குறைப்பதற்கும், வேறு நிறுவனங்களில் இருந்து பெறப்பட்ட 16 வாகனங்களை திருப்பி அனுப்புவதற்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்திருந்தார்.
No comments: