கனடாவில் சிசுக்கள் மர்மமான முறையில் உயிரிழந்தமைக்கான காரணங்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2009ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரையிலான ஒரு தசாப்த காலத்தில் 1338 சிசுக்கள் மர்மமான முறையில் மரணித்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இந்நிலையில், உரிய முறையில் நித்திரை செய்யாமையினாலேயே இந்த சிசுக்கள் உயிரிழந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
பிறந்த குழந்தைகள் உரிய முறையில் நித்திரை கொள்வதற்கு சந்தர்ப்பம் இல்லாத போது மூச்சு விடுவதில் ஏற்படும் அசௌகரியங்களினால் மரணங்கள் நிகழ்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
No comments: