News Just In

5/25/2022 11:31:00 AM

நிதி அமைச்சராக பிரதமர்ரணில் விக்கிரமசிங்க பதவிப்பிரமாணம்!



பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார்.

இன்று (25) முற்பகல் கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாண நிகழ்வு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத்தும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார்.



No comments: