News Just In

5/09/2022 02:49:00 PM

கல்முனை அஸ் ஸுஹராவில்வித்தியாரம்ப விழா.




(சர்ஜுன் லாபீர்)

கல்முனை அஸ் ஸுஹரா வித்தியாலயத்தில் தரம் 1 க்கு மாணவர்களை வரவேற்கும் வித்தியாரம்ப விழா இன்று திங்கள்கிழமை(09) கல்லூரியின் வளாகத்தில் நடைபெற்றது.

"சாதனைகள் படைக்க வரும் அன்புச் செல்வங்களை அன்புடன் வரவேற்கின்றோம்" எனும் தொனிப்பொருளில் பாடசாலையின் அதிபர் எம்.எஸ். எச்.ஆர் மஜீத்திய்யா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கல்முனை முஸ்லிம் கோட்டக் கல்விப் பணிப்பாளர் வி.எம்
ஸம்ஸம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மேலும் கெளரவ அதிதியாக கல்முனை வலய உதவிக் கல்விப் பணிப்பாளரும், EPSI இணைப்பாளருமான திருமதி மலிக் உட்படபாடசாலையின் நிறைவேற்று அபிவிருத்திக் குழ உறுப்பினர்கள்,பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் மற்றும் நலன்விரும்பிகள், பெற்றோர்கள், எனப் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில், அதிதிகளால் மாணவர்களுக்கு அகரம் எழுதப்பழக்கிய நிகழ்வும் இடம்பெற்ற அதேவேளை, மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் இனிப்புகளும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், பாடசாலையில் தரம் 2இல் கல்வி பயிலும் மாணவர்கள் மாலை அணிவித்து புதிதாக அனுமதி பெற்ற 170 தரம் 1 மாணவர்களையும் வரவேற்றனர்


No comments: