News Just In

5/09/2022 03:56:00 PM

மகிந்த ராஜினாமா!





பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவியை இராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ளார்.

இந்தக் கடிதம் சற்றுமுன்னர் அனுப்பப்பட்டதாக அறியமுடிந்தது.
. தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவிடம் கையளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் விஷேட உரை...

அரசியல் இலாபங்களுக்காக நாட்டை அராஜகமாக்க விரும்பவில்லை என அவர் இன்று (09) தனது விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அலரிமாளிகையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டை சீர்குலைக்க நாங்கள் விரும்பவில்லை. சவால்களை எதிர்கொண்டு சவால்களை சமாளிப்பதுதான் எனது கொள்கை. சவால்களை கண்டு தப்பித்து ஓடும் பழக்கம் எங்களிடம் இல்லை. அவற்றுக்கான முன்னுதாரணங்களை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் எதிர்க்கட்சிகள் அதன் சொந்த அரசியல் நிகழ்ச்சி நிரலைப் பின்பற்றுகின்றன. அவர்களுக்குத் தேவையானது அதிகாரம் மட்டுமே. ஜனாதிபதிக்கு எவ்வித தடையின்றி முடிவெடுக்க முடியும்.

பொதுநலன் கருதி ஒரு முடிவு எடுக்கப்பட்டால் அதற்காக எந்தத் தியாகத்தையும் செய்யத் தயார். நீங்கள் என் மீது வைத்த நம்பிக்கைதான் என்னை அரசியலுக்கு வர வைத்தது. இப்போது என்ன செய்வது என்று நான் உங்களிடம் கேட்கிறேன்.

உங்களுடன் ஒரு முடிவுக்கு வர நாங்கள் தயாராக இருக்கிறோம். முதலில் தாய்நாடு, இரண்டாவது தாய்நாடு, மூன்றாவது தாய்நாடு. உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.



No comments: