(எச்.எம்.எம்.பர்ஸான்)
நாட்டில் மண்ணெண்ணெயை பெற்றுக்கொள்ள பொதுமக்கள் தொடர்ந்தும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.அந்தவகையில், வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தில் நீண்ட நாட்களின் பின்னர் இன்று (26) மண்ணெண்ணெய் விநியோகம் செய்யப்பட்டது.
ஒரு நபருக்கு ஐநூறு ரூபாய்க்கு மாத்திரமே வழங்கப்பட்ட மண்ணெண்ணெயை பெற்றுக்கொள்ள கொழுத்தும் வெயிலில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் எனப்பலரும் நீண்ட வரிசையில் அவதிப்பட்டு பெற்றுச் சென்றதை காணமுடிந்தது.
No comments: